Monday, March 22, 2010

ஒற்றை எழுத்து

சிறகுகள் வலிக்கிறது
கடலில் அமர
ஒரு மரகிளை இல்லை
எனக்கு..
இதழ்கள் வரைய காத்திருக்கும்
உன் மௌன மொழி...
உன் மொழி என்னுயிரை
பதம் பார்க்கிறது!
'ம்' என்ற ஒற்றை எழுத்து
என் உணர்ச்சியின்
ஆழம் சென்று வலித்ததடா..
உன் கருவிழிகள்
செய்யாத காதலை
உன் மௌன மொழி உணர்த்தியது,
வலித்தது என் இதயம்...
என் கண்ணீரை ரசித்தது
உன்னுடைய அந்த
ஒற்றை எழுத்து...
மீண்டும் கேட்கிறது
என் நெஞ்சம் உன் மௌனத்தை...
வேய்ந்த கூரையில்
என் சேலை சிக்கியுள்ளது
எடுக்க துணிந்தும்
எடுக்காமல் என் மனம்...

Thursday, March 11, 2010

அயல் நாட்டுக்கரனின் காதலி

அலைபேசி அழைக்கும் போதெல்லாம்
உன் குரலோசை கேட்க
என் இதயம் துடிக்கிறது.

அணைக்க துடிக்கும்
உன் கரங்களை விட
என் கண்ணீரை துடைக்க உதவும்
கரங்களையே தேடுகிறேன்.

காத்திருந்து காத்திருந்து
இதயமும் இமையமும் கூட
வெற்று நிலமாகிவிட்டது.

புரியவில்லையா என் நெஞ்சம்
புரியாமல் துடிப்பை அடக்கும்
என் இதயத்தின் ஓசை
கேட்கவில்லையா உன் செவிகளில்.

ஐம்புலன்களையும்
அடக்க தெரியுமாம்
பெண்மைக்கு?
அறிவுகெட்ட சமுதாயம்,
சொன்னவனுக்கு எங்கே
தெரியும்பென்மையின்
உணர்ச்சியும் உத்வேகமும்.

காமமும் காதலும்தான்
ஆண்மையா?
அப்போது மிருகத்திடம்
உடைமையை வைத்துகொள்,
ஏன்
பெண்மையை
வதைக்கிறாய்?
பெண்மையை சோதிக்காதே!
என்
மனதின் மென்மையை
புரிந்துகொள்.
வந்துவிடு
என்னை ஆட்கொண்டுவிடு.
மிருகத்தின் உத்வேகமும் பெண்மையிடம் தோற்று போக காத்திருக்கிறேன்!!!!!!